மழை கொட்டித்தீர்த்த பெப்ரவரி!!
4 பங்குனி 2026 புதன் 18:49 | பார்வைகள் : 214
பிரான்சில் வானிலை நிலவரங்களை பதிவு செய்ய ஆரம்பித்ததில் இருந்து, முதன்முறையாக பெப்ரவரி மாதம் ஒன்றில் அதிகூடிய மழை இவ்வருடம் பதிவாகியுள்ளது.
1959 ஆம் ஆண்டில் இருந்து இந்த மழை, வெள்ளம் போன்ற அனர்த்தங்கள் ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது. அன்றில் இருந்து பதிவான அனைத்து பெப்ரவரி மாத அளவையும், இந்த 2026 அம் ஆண்டு பெப்ரவரி மாதம் பின்னுக்குத்தள்ளியுள்ளது.
இந்த பெப்ரவரியில்....
18 நாட்கள் வெள்ள அனர்த்தத்துக்காக ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
சராசரி வெப்பத்தை விட 3.5°C மேலதிகமாக பதிவாகியிருந்தது.
40 நாட்கள் தொடர்ச்சியாக மழை பெய்திருந்தது. (ஜனவரியில் ஆரம்பித்து...)
மொத்தமாக 412 மில்லிமீற்றர் மழை கொட்டித்தீர்த்திருந்தது.
என பல முந்தைய பதிவுகளை முறியடித்திருந்தது இந்த பெப்ரவரி.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan