கான்யே வெஸ்ட் கச்சேரிக்கு மார்செய் எதிர்ப்பு!!
4 பங்குனி 2026 புதன் 17:30 | பார்வைகள் : 360
பாடகர் கான்யே வெஸ்ட் (Kanye West) ஜூன் 11‑ஆம் தேதி மார்செயில் உள்ள ஒரேஞ்ச் வெலோத்ரோம் (Orange Vélodrome) மைதானத்தில் கச்சேரி நடத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, மார்செய் நகர முதல்வரும், பிரான்சின் யூத நிறுவனங்களின் பிரதிநிதித்துவ சபையான Crif இன் (Conseil Représentatif des Institutions Juives de France) தலைவரும் நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டுமெனக் கேட்டுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளில் கான்யே வெஸ்ட் பல யூத விரோத மற்றும் இனவெறி கருத்துகளை வெளியிட்டதற்காக பரவலாக விமர்சிக்கப்பட்டுள்ளார். மே மாதத்தில் அவர் «Heil Hitler» எனும் பாடலை வெளியிட்டார் (பின்னர் தளங்களில் இருந்து நீக்கப்பட்டது), அதில் நாசிகளைப் புகழ்ந்து பேசும் கருத்துகள் இடம்பெற்றிருந்தன. அதற்கு முன்பும், டேவிட் நட்சத்திரத்துடன் கூடிய சுவஸ்திகா சின்னத்தைப் பகிர்ந்ததற்கும், George Floyd மரணம் குறித்து தவறான கருத்துகளைப் பரப்பியதற்கும் அவர் கண்டிக்கப்பட்டிருந்தார்.
மார்செய் மாநகர முதல்வர் பெனுவா பயோன் (Benoît Payan) «வெறுப்பையும் நாசி சிந்தனைகளையும் ஊக்குவிப்போருக்கு மார்செய் மேடையாக இருக்க முடியாது» என்று தெரிவித்துள்ளார்.
Crifதலைவரும், ஹிட்லரைப் புகழ்ந்து பேசிய ஒருவரை மார்செய் வரவேற்பது நெறிமுறை ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கூறினார்.
Crif Marseille Provence‑இன் கௌரவத் தலைவி, நகரின் பல்வகைமை மற்றும் நினைவுகளை மதிக்கும் வகையில் கச்சேரியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
ஊடக அழுத்தங்கள் நிகழ்ச்சியை ரத்து செய்ய வழிவகுக்குமா என்பது இன்னும் தெளிவில்லை. கடந்த கோடையில், இதே காரணங்களால் ஸ்லோவாக்கியாவில் ஒரு விழா கான்யே வெஸ்டின் வருகையை ரத்து செய்தது.
கான்யே வெஸ்ட், தன் சர்ச்சைக்குரிய கருத்துகளை இருமுனை மனநிலை கோளாறுடன் (bipolar disorder) தொடர்புபடுத்தி, ஜனவரியில் தன் செயல்களை வருந்துவதாகவும் பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இது நம்பிக்கைக்கு உரியது அல்லவெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan