வருமான வரி பதிவு தொடக்கம் – காலக்கெடுவை தவறினால் அபராதம்!!
9 சித்திரை 2026 வியாழன் 07:45 | பார்வைகள் : 4911
வருமான வரி அறிவிப்பு சேவை இவ்வியாழக்கிழமை ஏப்ரல் 9ம் திகதி முதல் தொடங்கப்படள்ளது. இதன் மூலம் வரி செலுத்துபவர்கள் 2025 ஆம் ஆண்டுக்கான வருமான விவரங்களை அரசின் வரித்துறை இணையதளத்தில் பதிவு செய்யலாம். ஒவ்வொரு ஆண்டும் போலவே, வசிக்கும் மாவட்டங்களை(Département) பொறுத்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பொது நிதி இயக்குநரகம் அறிவித்துள்ள காலக்கெடுகளின்படி, 1 முதல் 19 வரை உள்ள மாவட்டங்களுக்கு இறுதி நாள் மே 21 ஆகும். 20 முதல் 54 வரை உள்ள மாவட்டங்களுக்கு கடைசி நாள் மே 28 என்றும், 55 முதல் 974 மற்றும் 976 வரை உள்ள மாவட்டங்களுக்கு கடைசி நாள் ஜூன் 4 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன், தேவையான திருத்தங்களை பலமுறைச் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இணைய வழி அறிவிப்பு கட்டாயமாக இருந்தாலும், இணைய வசதி இல்லாதவர்கள் காகித வடிவில் அறிவிப்பை சமர்ப்பிக்கலாம். அதற்கான இறுதி நாள் மே 19 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 மில்லியனுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தானியங்கி அறிவிப்பு முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், தகவல்கள் சரியாக இருந்தால் தனியாக உறுதிப்படுத்த தேவையில்லை; பதில் அளிக்காததே ஒப்புதலாக கருதப்படும். இருப்பினும், முன் நிரப்பப்பட்ட தகவல்களை சரிபார்ப்பது முக்கியம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
காலக்கெடுவை மீறி வருமான வரி அறிவிப்பை சமர்ப்பித்தால் அபராதம் விதிக்கப்படும். ஆரம்பத்தில் 10% வரி அதிகரிப்பு விதிக்கப்படும் நிலையில், தாமதம் நீண்டால் இது 20%, 40% என உயர்கிறது. மறைமுக வருமானம் கண்டறியப்பட்டால் 80% வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், தாமதமான ஒவ்வொரு மாதத்திற்கும் 0.20% வட்டி வரை விதிக்கப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire