சிக்ஸரில் எந்த வீரரும் செய்யாத சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி
8 சித்திரை 2026 புதன் 16:39 | பார்வைகள் : 1365
ஐபிஎல் தொடரில் சிக்ஸர்களில் எந்த வீரரும் செய்யாத சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
08.04.2026 ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி, மழையின் காரணமாக 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
முதலில் துடுப்பாட்டம் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ், 11 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 150 ஓட்டங்கள் குவித்தது.
151 என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 11 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 1123 ஓட்டங்கள் குவித்தது.
இதன் மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வைபவ் சூர்யவன்ஷி, 14 பந்துகளில் 1 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உட்பட 39 ஓட்டங்கள் குவித்தார்.
நேற்றைய போட்டியில் அடித்த 5 சிக்ஸர்கள் மூலம், ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 30 சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
வெறும் 157 பந்துகளில் வைபவ் சூர்யவன்ஷி, 30 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.
அடுத்ததாக ரிஷப் பந்த் 373 பந்துகளிலும், இஷான் கிஷன் 431 பந்துகளிலும் இந்த இலக்கை எட்டினர்.
மேலும், 20 வயதை எட்டும் முன் ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
முன்னதாக இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பந்த் 20 வயதிற்குள் தலா 30 சிக்ஸர்கள் அடித்த நிலையில், வைபவ் 15 வயதிலே 35 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan