காலியிறுதியில் ஹாட்ரிக் கோல் அடித்த நட்சத்திர வீரர்! மான்செஸ்டர் மிரட்டல்…
5 சித்திரை 2026 ஞாயிறு 09:18 | பார்வைகள் : 302
FA Cup கால்பந்து தொடரின் காலிறுதியில் மான்செஸ்டர் சிட்டி 4-0 என்ற கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தியது.
மான்செஸ்டரின் எத்திஹாத் மைதானத்தில் நடந்த FA Cup காலிறுதிப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி மற்றும் லிவர்பூல் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில், நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் கோல் அடித்து மான்செஸ்டர் சிட்டியின் கணக்கை தொடங்கினார்.
அதனைத் தொடர்ந்து 45+2வது நிமிடத்திலேயே மற்றொரு கோலினை அடித்தும் ஹாலண்ட் மிரட்டினார்.
பின்னர் இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் (50வது நிமிடம்) மான்செஸ்டர் சிட்டி வீரர் அன்டோய்னி கோல் அடித்தார்.
அடுத்த 7 நிமிடங்களில் எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland) ஹாட்ரிக் கோல் அடித்தார். ஆனால் கடைசிவரை லிவர்பூல் அணியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை.
இறுதியில் மான்செஸ்டர் சிட்டி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan