Paristamil Navigation Paristamil advert login

Montreuil: அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலி!!

Montreuil: அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலி!!

5 சித்திரை 2026 ஞாயிறு 08:00 | பார்வைகள் : 813


Montreuil பகுதியில் இடம்பெற்ற குடியிருப்பு தீ விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை  நள்ளிரவு நடந்த இந்த விபத்தில், தீக்கிரையான வீட்டுக்குள் ஒரு ஆண் நபரின் உடலும், கட்டிடத்தின் அடிப்பகுதியில் ஒரு பெண்ணின் உடலும் கண்டெடுக்கப்பட்டதாக விசாரணை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நகர மேயரான Patrice Bessac இந்த சம்பவத்தை “மிகவும் கொடூரமான பெண்கொலை” எனக் குறிப்பிட்டுள்ளார். அதிகாலை சுமார் 1.40 மணியளவில் புகை மணத்தை உணர்ந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்துள்ளனர். நான்காவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து தப்பிக்க முயன்ற பெண் ஜன்னல் வழியாக குதித்ததாகவும், பின்னர் அவரை மீட்புப் படையினர் உயிர்ப்பிக்க முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குடியிருப்புக்குள் இருந்த ஆண் நபர் புகை மூச்சுத்திணறலால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாருக்கு உதவுவதற்காக மனநல ஆதரவு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.