Paristamil Navigation Paristamil advert login

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் - சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் - சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்

4 சித்திரை 2026 சனி 16:04 | பார்வைகள் : 363


அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நடவடிக்கை வெள்ளிக்கிழமை கூடுதல் பதற்றத்தை எட்டியுள்ளது.

ஈரானிய இராணுவத்தினர் அமெரிக்காவின் இரண்டு போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி இருப்பது இந்த பதற்றத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது.

ஈரானிய எல்லைக்குள் அமெரிக்க ராணுவத்தின் 31.1 மில்லியன் டொலர் மதிப்புள்ள அதிநவீன F-15E ஸ்டிரைக் ஈகிள் போர் விமானம் மற்றும் அமெரிக்காவின் A-10 Warthog ரக விமானம் குவைத் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதால் ஈரானுடனான அமைதி பேச்சுவார்த்தையில் எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் பேச்சுவார்த்தைகளுக்கு தடையாக இருக்கும் என்று கருத்தை நிராகரித்த டிரம்ப், “இல்லை, இல்லை”  “இது போர்” “நாம் போரில் இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.