உலகளவில் அதிகரிக்கும் உணவு பொருட்களின் விலை - ஐ.நா எச்சரிக்கை
3 சித்திரை 2026 வெள்ளி 16:38 | பார்வைகள் : 1404
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நடவடிக்கைக்கு பிறகு உலகளாவிய உணவு பொருட்களின் விலை அதிகரித்து இருப்பதாக ஐக்கிய நாடுகள் தகவல் தெரிவித்துள்ளது.
ஈரான்-அமெரிக்கா இடையிலான போர் மோதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது போன்ற நடவடிக்கைகள் காரணமாக மார்ச் மாதத்தில் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வை சந்தித்துள்ளது.
உணவு சந்தையின் நிலைத்தன்மை சமீபத்தில் மாறி இருப்பதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மார்ச் மாதத்தில் FAQ உணவு விலைக் குறியீடு 128.5 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
உணவு பொருட்களின் விலை மாதாந்திர நிலவரப்படி பிப்ரவரியை விட மார்ச்சில் 2.4% அதிகரித்துள்ளது.
2025ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் உணவு பொருட்களின் விலை 1% வரை விலை உயர்ந்துள்ளது.
உணவு பொருட்களின் விலை உயர்வு தற்போது கவலை அளிப்பதாக இருந்தாலும் இதனால் வருங்காலங்களில் ஏற்பட இருக்கும் சங்கிலித் தொடர் விளைவுகள் குறித்து FAO நிபுணர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருளின் விலை அதிகரிக்கிறது. இதனால் பிற பொருட்களின் விலையும் அதிகரிப்பதோடு விவசாயிகளின் லாப வரம்பு குறைவது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan