உக்ரைனை குறிவைத்த 26 ஏவுகணைகள், 500 ட்ரோன்கள் - 20 இலக்குகள் மீது தாக்குதல்
3 சித்திரை 2026 வெள்ளி 16:27 | பார்வைகள் : 1491
ஒரே நாளில் 500 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ஏவி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை உக்ரைனிய வான் பாதுகாப்பு படையினர் வெளியிட்ட தகவலில், இரவோடு இரவாக உக்ரைனிய நகரங்களை குறிவைத்து 515 ட்ரோன்களை ரஷ்யா ஏவியதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் 24 KH-101 கப்பல் ஏவுகணையும், 2 Iskander-K கப்பல் ஏவுகணையும் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனிய பாதுகாப்பு படை டெலிகிராம் பக்கத்தில் வெளியிட்ட தகவலில், ரஷ்யா 10 Iskander-M கப்பல் ஏவுகணைகள், 25 KH-101 கப்பல் ஏவுகணைகள் மற்றும் இரண்டு Iskander-K கப்பல் ஏவுகணைகள் உடன் 542 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.
ஏவப்பட்ட ட்ரோன்களில் Shahed, Gerbera மற்றும் Italmas ரக ட்ரோன்கள் உள்ளடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனிய வான் பாதுகாப்பு படையினர் வெளியிட்ட தகவலின் படி, 11 ஏவுகணைகள் மற்றும் 27 ட்ரோன்கள் உக்ரைனின் 20 வெவ்வேறு இடங்களை தாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan