அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும் - ஈரான் சூளுரை
3 சித்திரை 2026 வெள்ளி 06:55 | பார்வைகள் : 1631
ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதாக அமெரிக்கா- இஸ்ரேல் குற்றம்சாட்டின. இதை ஈரான் திட்டவட்டமாக மறுத்தது. இது தொடர்பாக அமெரிக்கா - ஈரான் இடையே நடந்த அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்தன.
இதில் ஈரான் ராணுவ கட்டமைப்புகள், ஏவுகணை தளம் உள்ளிட்டவைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதற்கிடையே ஈரான் போரில் இருந்து அமெரிக்கா விரைவில் வெளியேறும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் இன்று 34-வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், டிரம்ப் தனது நாட்டு மக்களுக்கு முதல் முறையாக உரையாற்றினார். அதில், இலக்குகளை நாங்கள் நெருங்கிவிட்டோம். போரை இன்னும் வேகமாக முடிப்போம்.
2 முதல் 3 வாரங்கள் ஈரானை மிகவும் கடுமையாக தாக்க போகிறோம். ஜலசந்தியை பாதுகாக்க மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா உதவும் என்றார்.
இந்தநிலையில், ஈரானின் ராணுவத் திறனை முழுமையாக மதிப்பிடத் தவறிய அமெரிக்காவும், இஸ்ரேலும் பேரழிவுகரமான தாக்குதல்களை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும்.
அமெரிக்கா அவமானப்பட்டு, இழிவடைந்து, நிரந்தரமான வருத்தத்திற்கு ஆளாகி சரணடையும் வரை இந்தப் போர் தொடரும் என ஈரானை அழித்துவிட்டதாக டிரம்ப் கூறியதற்கு ஈரான் ராணுவம் சூளுரைத்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan