விஜய் சேதுபதி நடித்த முத்து என்கிற காட்டான் வெற்றியா?
2 சித்திரை 2026 வியாழன் 17:46 | பார்வைகள் : 274
விஜய் சேதுபதி நடித்த முதல் வெப்சீரிஸ் முத்து என்கிற காட்டான். கடந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஓடிடியில் வெளியானது. காக்கா முட்டை மணிகண்டன், அஜித் குமார் இணைந்து இயக்கி இருந்தனர். 10 எபிசோடுகளை பார்த்தவர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்து இருந்தனர். உண்மையில் முத்து என்கிற காட்டான் வெற்றியா என விசாரித்தால், ஓடிடியில் வெளியாவதால் எத்தனைபேர் பார்த்து இருக்கிறார்கள் என்று விவரம் வெளியிடப்படாது.
விஜய்சேதுபதி நடித்த வெப்சீரிஸ் என்பதால் சில லட்சம் பேர் பார்த்திருக்கிற வாய்ப்புள்ளது. ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து விஜய்சேதுபதி அதை தயாரித்து இருக்கிறார். அவருக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை. ஆகவே, இதை வெற்றி பட்டியலிலும் சேர்க்க முடியாது. தோல்வியிலும் கொண்டு வர முடியாது.
அவர் நடித்த டிரைன், ஸ்லம்டாக் 33, டெம்பிள் ரோடு படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கிறது. அடுத்து அரசன் படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம் படத்தில் நடிக்கப் போகிறார். பாலாஜி தரணிதரன் படம், தியாகராஜா குமாரராஜா படம் உட்பட இன்னும் சில படங்கள் அவர் கைவசம் இருக்கிறது. அவர் நடித்த ஏஸ், காந்தி டாக்ஸ் ஓடவில்லை. ஆனால், தலைவன் தலைவி ஹிட் ஆனது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan