மம்முட்டியின் இளமைக்கான ரகசியம் தெரியுமா?
2 சித்திரை 2026 வியாழன் 17:30 | பார்வைகள் : 1203
மலையாளத்தில் 45 வருடங்களாக நடித்து வருபவர் மம்முட்டி. பல தமிழ் படங்களிலும் மம்முட்டி நடித்திருக்கிறார். தற்போது அவருக்கு 74 வயதாகிறது. ஆனால் அவருக்கு 74 வயது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.. எனில் அவரின் தோற்றம் அப்படி!.. மம்முட்டியை பார்ப்பவர்கள் அவருக்கு ஒரு 50 லிருந்து 55 வயது வரை இருக்கும் என்றுதான் நினைப்பார்கள்.. 20 வயது இளமையாக தன்னை காட்ட மம்முட்டி என்னென்ன செய்கிறார் என்று பார்ப்போம்.
இளமையை பாதுகாக்க மம்முட்டி பெரிதாக எதுவும் செய்வதில்லை.. தனக்கு மிகவும் பிடித்த எல்லா உணவுகளை சாப்பிடுகிறார். ஆனால், அதிகமாக சாப்பிடாமல் அளவோடு சாப்பிடுகிறார். அதாவது, கட்டுப்பாடுடன் கூடிய உணவு பழக்கத்தை கடைபிடிக்கிறாராம். எதையும் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கம் அவருக்கு இல்லை. அன்றாட மெனுவில் ஓட்ஸ், சிறுதானியங்கள், முட்டை, மீன் ஆகியவை இடம்பெறுகிறது. உடலுக்கு தேவையான புரோட்டினை உணவுகள் மூலமே தினமும் எடுத்துக் கொள்கிறார்..
பழங்கள், காய்கறிகள் மற்றும் தேவையான அளவு தண்ணீரை எடுத்துக்கொள்வதில் கவனமாக இருப்பார். எண்ணெயில் பொரித்த துரித உணவுகள், ஜங் ஃபுட் உணவுகளை அவர் சாப்பிடுவது இல்லை. அவருக்கென்று தனி சமையல்காரர வீட்டில் நியமிக்கப்பட்டுள்ளார். குறைந்த அளவிலான எண்ணெய் சேர்த்து அவருக்கு அசைவ உணவுகள் சமைக்கப்படுகிறது.
தினமும் இரவு 7 மணிக்குள் உணவை முடித்துக் கொள்கிறார்.. மம்முட்டிக்கு மதுப்பழக்கம் இல்லை. முறையான உடற்பயிற்சி, ஆழ்ந்த வாசிப்பு மற்றும் சரியான நேரத்துக்கு உறங்குவது, சரியான நேரத்திற்கு எழுவது, வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வது போன்றவையே மம்முட்டியின் இளமைக்கான ரகசியம் என்கிறார்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan