Paristamil Navigation Paristamil advert login

சென்னையில் களமிறங்குவாரா தோனி? - பயிற்சியில் ஈடுபட்டதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு

 சென்னையில் களமிறங்குவாரா தோனி? - பயிற்சியில் ஈடுபட்டதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு

2 சித்திரை 2026 வியாழன் 12:56 | பார்வைகள் : 165


தோனி பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால், அடுத்த போட்டியில் அணியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், 2026 ஐபிஎல் தொடரின் தனது முதல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் பரிதாபமான தோல்வியை சந்தித்தது.

நெருக்கடியான சூழலில் அனுபவம் வாய்ந்த வீரரான தோனி இல்லாதது பின்னடைவாக பார்க்கப்பட்டது.

காயம் காரணமாக CSK-வின் நம்பிக்கை நட்சத்திரமான தோனி, இந்த போட்டியில் அணியில் இடம் பெறவில்லை.

காலில் ஏற்பட்டுள்ள தசைப்பிடிப்பு காரணமாக தோனி குறைந்தபட்சம் 2 வாரங்கள் அணியில் இடம்பெற மாட்டார் என CSK நிர்வாகம் அறிவித்தது.

இந்நிலையில், தோனி நேற்று மீண்டும் துடுப்பாட்ட பயிற்சியில் ஈடுபடும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது. இதில் தோனி அதிரடியாக ஆடாமல், பந்துகளை கணித்து மெதுவான ஷாட்களை ஆடுகிறார்.

இது முழுமையான போட்டிக்குரிய பயிற்சியாக இல்லாவிட்டாலும், காயம் குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.  

நாளை சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாட உள்ளது.

தோனி பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால், நாளை சென்னையில் நடைபெற போட்டியில் தோனி களமிறங்க வாய்ப்புள்ளதா என்ற எதிர்பார்ப்பில் CSK ரசிகர்கள் உள்ளனர்.