Paristamil Navigation Paristamil advert login

கேப்டன் பண்ட் உடன் ஆக்ரோஷமான விவாதம் - வதந்திகளுக்கு சஞ்சீவ் கோயங்கா முற்றுப்புள்ளி

 கேப்டன் பண்ட் உடன் ஆக்ரோஷமான விவாதம் - வதந்திகளுக்கு சஞ்சீவ் கோயங்கா முற்றுப்புள்ளி

2 சித்திரை 2026 வியாழன் 12:04 | பார்வைகள் : 153


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மீண்டும் எழுச்சி பெறும் என்று அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2026 ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 141 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 17.1 ஓவர்கள் முடிவிலேயே 145 ஓட்டங்கள் குவித்து இந்த போட்டியில் வெற்றி பெற்றது.

போட்டிக்கு பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் ஜஸ்டின் லாங்கர் ஆகியோருடன் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தனது முதல் போட்டியில் தோல்வியை தழுவி இருந்தாலும், அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா நம்பிக்கையையும், நிதானத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக X தளத்தில் சஞ்சீவ் கோயங்கா வெளியிட்டுள்ள பதிவில்,  இது நீண்ட போட்டிகள் கொண்ட தொடர். அர்த்தமுள்ள் ஒன்றை உருவாக்கும் போது இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவது சகஜம் என தெரிவித்துள்ளார்.

மேலும் எங்கள் அணியின் கேப்டன் மற்றும் வீரர்கள் மீது முழு நம்பிக்கை உள்ளது, அவர்கள் வலுவாக மீண்டு வருவார்கள் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கதை இத்துடன் முடிந்துவிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.