என் அரசியல் அனுபவம் கூட உங்கள் வயது இல்ல பார்த்து பேசுங்க: உதயநிதியை விளாசிய பழனிசாமி
2 சித்திரை 2026 வியாழன் 05:20 | பார்வைகள் : 996
மோடியின் முரட்டு பக்தர் பழனிசாமி என் கிறார் உதயநிதி. கண்டு பிடித்து விட்டார், அவருக்கு நோபல் பரிசு தராலாம். பார்த்து பேசுங்க.. நான் 58 ஆண்டு களாக கட்சியில் இருக் கிறேன். என் அரசியல் அனுபவம் கூட உங்க வயது கிடையாது. வரம்பு மீறி பேசினால் என் தொண்டர்களே பதிலடி தருவார்கள் என ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி ஆவேசமாக பேசினார்.
அவர் பேசியதாவது:
மோடியின் முரட்டு பக்தன் பழனிசாமி என்கிறார் உதயநிதி. உங்கள் தாத்தா கருணாநிதி யாருக்கு முரட்டு பக்தராக இருந்தார் என்பது (படத்தை காட்டினார்) தெரியும் என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் கருணாநிதி இருந்த படத்தை காட்டினார். அவரது குடும்பத்திற் காகவும், பதவிக்காகவும் மட்டுமே கருணாநிதி டில்லி சென்றார்.
மக்கள் பிரச்னைக்காக டில்லி சென்றததாக சரித் திரம் கிடையாது. 2ஜி ஊழலில் சிறையில் அடைக்க இருந்த கனிமொழியை காப்பாற்ற டில்லிக்கு ஓடினார். நான் 58 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன். என் அரசியல் அனுபவம் கூட உங்க வயது கிடையாது. உதய நிதிக்கு நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை. நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் யாரு.. உதயநிதி. எனது தொண்டர்களே இனி பதிலடி தருவார்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நீங்கள் எதை செய் தீர்கள். எனது ஆட்சியில் சட்டக்கல்லுாரி, மருத்துவக் கல்லுாரி கொண்டு வந்தேன். அதைதான் நீங்கள் ஸ்டிக்கர் ஓட்டி திறந்து வைத்தீர்கள். இந்தப் பகுதி வறட்சியான பகுதி. விவசாயிகள் வளமுடன் வாழ வேண்டும் என காவிரி-குண்டாறு-வைகை இணைப்பு திட்டத்திற்காக ரூ.14ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி சரித்திரம் படைத்தோம். பணி துவங்கியும், அதையும் தி.மு.க.,வினர் முடக்கியுள்ளனர்.
விவசாயி, மக்கள் விரோத ஆட்சி தேவையா. எங்கள் ஆட்சி அமைந்தவுடன் திட்டத்தை நிறைவேற்றுவோம். அப்பா, மகன் சேர்ந்து லுாட்டி அடிக்கின்றனர். பிற அமைச்சர்கள் படம் கூட டிவி.,யில் வராது. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அ.தி.மு.க.,வை முடக்க சதி செய்தனர். அதை முறியடித்து மக்கள் இயக்கமாக கட்சி வளர்ந்துள்ளது.
31 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி. அனைத்து தரப்பு மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தது அ.தி.மு.க., அரசு தான். 5 ஆண்டுகளில் 5 லட்சம் கடன் வாங்கி கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக்கி உள்ளனர். இது தான் உங்கள் சாதனை.
நீங்கள் அதிகமாக பள்ளிகளை திறந்து விட்டீர்கள், அதனால் மூடுகிறோம் என கல்வி அமைச்சர் மகேஷ் சட்டசபையில் பேசினார். நீட் தேர்விற்கு விதி விலக்கு பெற முடியும் என தவறான செய்தியை பரப்பி ஆட்சிக்கு வந்து மக்களை ஏமாற்றி விட்டனர். காங்., ஆட்சியில் தான் நீட் அறிமுகம் செய்தனர். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க., யாருக்கும் அடிமை இல்லை. கச்சத்தீவு மத்தி யில் காங்., மாநிலத்தில் தி.மு.க., ஆட்சியில் தாரை வார்த்து விட்டு, இன்று மீட்போம் என மக்களை ஏமாற்றுகின்றனர்.
டி.வி.,யில் நேரடி ஒளிபரப்பை தடுக்கின்றனர். பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இஸ்லாமிய மக்களுக்கு நிறைய செய்துள்ளோம். அ.தி.மு.க., ஆட்சியில் நோன்புக்கு 5000 டன் அரிசி வழங்கினோம். ஹச் புனித பயணம் மேற்கொள்ள ஆண்டுக்கு ரூ.6 கோடி மானியம் வழங்கினோம். அதை மீண்டும் ரூ.12 கோடியாக உயர்த்தியும், ரூ.15கோடி ஹச் இல்லம் என அறிவித்தோம். ஓய் வூதியத்தொகை ரூ.3000 மாக உயர்த்தினோம். புயலில் சேதமடைந்த நாகூர் தர்காவை ரூ.4.25 கோடியில் சரி செய்தோம்.
அப்துல் கலாம் போட்டியிட்டபோது ஆதரவு தந்தது அ.தி.மு.க., அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது தி.மு.க., தான். தமி ழகத்தை சேர்ந்த கலாம் ஜனாதிபதி ஆவதை தடுத்த தி.மு.க.,வை சிறுபான்மை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan