ஹோர்மூஸ் ஜலசந்தி திறக்கப்படும்... அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை
1 சித்திரை 2026 புதன் 17:42 | பார்வைகள் : 4340
ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், ஹோர்மூஸ் ஜலசந்தி திறக்கப்படும், ஆனால், அமெரிக்காவுக்கு அனுமதி கிடையாது என்று கூறியுள்ளார்.
ஹோர்மூஸ் ஜலசந்தி திறக்கப்படாது என்றும், அது தொடர்பில் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும், இனியும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படாது என்றும் ஈரான் நாடாளுமன்றம் அறிவித்துள்ளதாக ஒரு பக்கம் செய்திகள் வெளியாகிவருகின்றன.
இன்னொரு பக்கமோ, ஈரான் நாடாளுமன்றத்தில் தேசிய பாதுகாப்புக் குழுவின் தலைவரான இப்ராஹின் அஸிஸி, ஹோர்மூஸ் ஜலசந்தி திறக்கப்படும், ஆனால், ட்ரம்புக்கு அனுமதி கிடையாது என கூறியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அஸிஸி சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டதாக கூறப்படும் செய்தி ஒன்றில், ஹோர்மூஸ் ஜலசந்தி திறக்கப்படும், ஆனால், ட்ரம்புக்கு அனுமதி கிடையாது என்றும், ஈரான் அரசின் புதிய விதிகளுக்கு இணங்குபவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும், 47 ஆண்டு கால விருந்தோம்பல் முடிவுக்கு வந்துவிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan