Paristamil Navigation Paristamil advert login

எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டை தொடரும் TotalEnergies நிறுவனம்...

எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டை தொடரும் TotalEnergies நிறுவனம்...

31 பங்குனி 2026 செவ்வாய் 21:34 | பார்வைகள் : 518


மார்ச் 12 முதல், பெட்ரோல் லிட்டருக்கு 1.99 யூரோவும், டீசல் லிட்டருக்கு 2.09 யூரோவும் என விலை வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31, செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், இன்றோடு முடிவடைய வேண்டிய விலை வரம்பை TotalEnergies நிறுவனம் இந்த விலை கட்டுப்பாட்டை ஏப்ரல் 7 வரை நீடிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையை “ஈஸ்டர் வார இறுதியில் பிரான்சில் உள்ள தனது வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க” மேற்கொள்வதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இது “பிரான்ஸ் பகுதிகளிலுள்ள 3,300 TotalEnergies நிலையங்களுக்கு” பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மார்ச் 31 நிலவரப்படி, பிரான்சில் அதிகம் பயன்படுத்தப்படும் சாலை எரிபொருளான டீசல் சராசரியாக லிட்டருக்கு 2.24 யூரோவாகவும், SP95-E10 பெட்ரோல் லிட்டருக்கு 1.99 யூரோவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.