Paristamil Navigation Paristamil advert login

தமிழகத்தில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கேட்போம்; மத்திய அமைச்சர் அத்வாலே

தமிழகத்தில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கேட்போம்; மத்திய அமைச்சர் அத்வாலே

1 சித்திரை 2026 புதன் 06:19 | பார்வைகள் : 192


தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் விஜய்யிடம் ஆதரவை கோருவோம்; ஆட்சி அமைப்போம் என்று இந்திய குடியரசு கட்சி தலைவரும் மத்திய அமைச்சருமான ராமதாஸ் அதாவலே கூறி உள்ளார்.

புதுச்சேரியில் அவர் அளித்த பேட்டி;

நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்கும். அசாம் மற்றும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி இருக்கிறது. இப்போது மேற்கு வங்கத்தில் ஜெயிப்போம், தமிழகத்திலும் நாங்கள் வெல்வோம்.

தமிழகத்தில் நடிகர் விஜய் கட்சி தொடங்கி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறார். கண்டிப்பாக இந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். தேர்தலுக்கு பின்னர் பெரும்பான்மை குறைவாக இருந்தால், கிடைக்காவிட்டால் கண்டிப்பாக நாங்கள் விஜய்யிடம் ஆதரவை கோருவோம். தமிழகத்தில் நாங்கள் ஆட்சியை அமைப்போம். அதுதான் இப்போதைக்கு எங்கள் நிலைப்பாடு.

கேரளாவில் இப்போது இருக்கும் ஆட்சியை அங்குள்ள மக்கள் யாரும் விரும்பவில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் என மாறி, மாறி ஆட்சிக்கு வந்தாலும் அங்குள்ள மக்களுக்கு நீதி கிடைப்பது இல்லை. எனவே, அங்குள்ள மக்களின் மனநிலை மாறி வருகிறது.

இவ்வாறு ராமதாஸ் அத்வாலே பேட்டியளித்தார்.