யாழில் அதிர்ச்சி - அடுத்தடுத்து மீட்கப்பட்ட சடலங்கள்
31 பங்குனி 2026 செவ்வாய் 13:37 | பார்வைகள் : 1450
யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்கரை பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில், குறித்த சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அல்வாய் பகுதியை சேர்ந்த 78 வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த முதியவர் நேற்று (30) தனது வீட்டாருடன் முரண்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
வீட்டை விட்டு வெளியேறியவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று (31) காலை முதியவர் வியாபாரி மூளை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை யாழ். இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை கோவிலுக்கு அருகில் சடலம் ஒன்று காணப்படுவதைக் கண்ட பொதுமக்கள் சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற சுன்னாகம் பொலிஸார், முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்தவர் சுதுமலை பகுதியை சேர்ந்த 75 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan