ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை மீது தாக்குதல் – பலர் பலி, அவசரக் கூட்டம் கோரி பிரெஞ்சு அரசாங்கம் வலியுறுத்தல்!!
31 பங்குனி 2026 செவ்வாய் 07:45 | பார்வைகள் : 3411
லெபனானின் தெற்கு பகுதியில் செயல்படும் ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்கால அமைதிப்படை (UNIFIL) உறுப்பினர்களில் பலர் சமீபத்தில் உயிரிழந்ததுடன், சிலர் காயமடைந்துள்ளனர். இந்த தொடர்ச்சியான சம்பவங்களைத் தொடர்ந்து, பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் Jean-Noël Barrot ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டத்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்த தாக்குதல்கள் “ஏற்றுக்கொள்ள முடியாததும், நியாயப்படுத்த முடியாததும்” எனக் கடுமையாக கண்டனம் தெரிவித்த அவர், தெற்கு லெபனானில் ஏற்பட்ட மர்ம வெடிப்பில் மேலும் இரு அமைதிப்படை வீரர்கள் உயிரிழந்ததாக குறிப்பிட்டார். காயமடைந்தவர்களுக்கு விரைவாக குணமடையவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபத்தையும் வெளிவிவகார அமைச்சர் Jean-Noël Barrot தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், United Nations Interim Force in Lebanon மீது தாக்குதல் நடத்திய வெடிபொருளின் மூல காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐ.நா. பாதுகாப்பு சபையின் 1701 தீர்மானத்தை அனைத்து தரப்பும் மதித்து, அமைதிப்படை பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பிரெஞ்சு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan