பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பயத்தை காட்டிய ஜம்பா - போராடி வென்ற வார்னர் படை
30 பங்குனி 2026 திங்கள் 10:43 | பார்வைகள் : 1065
PSL 2026 போட்டியில் லாகூர் கிளாண்டர்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸ் வீழ்த்தியது.
கடாஃபி மைதானத்தில் நடந்த போட்டியில் கராச்சி கிங்ஸ் மற்றும் லாகூர் கிளாண்டர்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய லாகூர் அணி ஆடம் ஜம்பாவின் சுழலில் தடுமாறியது. அதேபோல் மிர் ஹம்ஸா உட்பட ஏனைய பந்துவீச்சாளர்களும் கடுமையான நெருக்கடி கொடுத்தனர்.
இதனால் லாகூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ஓட்டங்கள் எடுத்தது. அப்துல்லா ஷாஃபிக் 33 (24) ஓட்டங்களும், ஹஸீபுல்லா கான் 28 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஆடம் ஜம்பா, மொயீன் அலி மற்றும் மிர் ஹம்ஸா தலா 2 விக்கெட்டுகளும், ஹசன் அலி, சல்மான் அகா மற்றும் அப்பாஸ் அப்ரிடி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய கராச்சி அணியில் டேவிட் வார்னர் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சல்மான் டக்அவுட் ஆனார். எனினும் வசீம் 38 ஓட்டங்கள் குவித்தார்.
ஏனைய வீரர்கள் தங்கள் பங்குக்கு ஓட்டங்களை சேர்க்க, கராச்சி அணி 19.3 ஓவர்களில் 131 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. லாகூர் அணித்தலைவர் ஷாஹீன் ஷா அப்ரிடி 18 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan