நான்கு நாட்களுக்கு நிறுத்தப்படும் வங்கிப் பரிவர்த்தனைகள்!!
29 பங்குனி 2026 ஞாயிறு 21:30 | பார்வைகள் : 723
ஈஸ்டர் வாரத்தில், வழக்கமான வங்கிப் பணமாற்றங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். பெறுநரின் கணக்கில் பணம் ஏப்ரல் 7 அன்று மட்டுமே வரவு வைக்கப்படும். இந்த தாமதத்திற்கு ஒரு முக்கிய காரணம் TARGET2 என்ற தளம் ஆகும். இது ஐரோப்பிய ஒன்றிய வங்கிகள் இடையே பாதுகாப்பாக பணத்தை பரிமாற பயன்படும் அமைப்பு. ஈஸ்டர் விடுமுறைகளின் போது இந்த தளம் செயல்படாது, அதனால் பணமாற்றங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன.
உதாரணமாக, “ஏப்ரல் 1 அன்று மாலை 4 மணிக்குப் பிறகு செய்யப்படும் பணமாற்றங்கள் ஏப்ரல் 7 அன்று மட்டுமே செயல்படுத்தப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே உங்கள் வங்கிப் பணமாற்றங்களை முன்னதாகவே திட்டமிட்டுக கொள்ளுகள்
ஈஸ்டர் நீண்ட விடுமுறையில் பணத்தை அனுப்புவது எப்படி?
பாரம்பரிய வங்கி பணமாற்றங்களைத் தவிர பல மாற்று வழிகள் உள்ளன:
- உடனடி பணமாற்றம் (virement instantané): 2025 வரை கட்டணமாக இருந்த இது, இப்போது இலவசமாகவும், 7 நாட்கள் 24 மணி நேரமும் கிடைக்கிறது.
- P2P (particulier à particulier) பண பரிமாற்ற பயன்பாடுகள்: இவை IBAN எண் தேவையில்லை; மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் மூலம் பணம் அனுப்ப முடியும்.இதில் “Lydia” மிகவும் பிரபலமானது. 2024 முதல் “Wero” (முன்னாள் Paylib) பயன்பாடும் அறிமுகமாகியுள்ளது, இது சில வங்கிகளின் செயலிகளில் கிடைக்கிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan