KKR தீம் கொண்ட மின்சார ஸ்கூட்டர் - Vida VX2 Plus சிறப்பு பதிப்பு அறிமுகம்
29 பங்குனி 2026 ஞாயிறு 16:34 | பார்வைகள் : 1250
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரான Hero MotoCorp தனது மின்சார வாகன பிராண்டான Vida மூலம் புதிய VX2 Plus KKR Edition ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது கோல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட சிறப்பு பதிப்பு ஆகும்.
இந்த ஸ்கூட்டர் Knight Purple மற்றும் Golden நிறங்களில் கிடைக்கிறது. KKR அணியின் லோகோவும், “Limited Edition” குறியீடும் வாகனத்தில் இடம்பெற்றுள்ளன.
இதன் மூலம் IPL ரசிகர்களை கவரும் வகையில் Hero MotoCorp புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
Vida VX2 Plus KKR Edition, Hero MotoCorp Electric Scooter, KKR IPL Special Edition Scooter, Vida Electric Scooter Price India, VX2 Plus Features and Specs, IPL Themed Electric Vehicles, Knight Riders Scooter Launch #VidaVX2Plus #KKREdition #HeroMotoCorp #ElectricScooter #IPL2026 #KKR #EVIndia
மேலும், “VIDA Electrifying Player of the Match” என்ற திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடும் KKR வீரருக்கு, அவரது பெயர் மற்றும் ஜெர்சி எண் பொறிக்கப்பட்ட சிறப்பு VX2 Plus KKR Edition வாட்ச் வழங்கப்படும்.
Vida VX2 Plus ஸ்கூட்டரில், 4.3 அங்குல டிஜிட்டல் திரை, Turn-by-turn Navigation, Smartphone Integration, OTA Updates, 33.2 லிட்டர் Boot Space, 12 அங்குல டயர்கள், LED Lights என பல நவீன அம்சங்கள் உள்ளன.
இந்த சிறப்பு பதிப்பு VX2 Plus இந்தியாவில் ரூ.1.16 லட்சம் (ex-showroom) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஷோரூம்களில் விற்பனைக்கு வரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan