பஹ்ரைனின் மிகப்பெரிய அலுமினிய ஆலை மீது தாக்குதல் நடத்திய ஈரான்
29 பங்குனி 2026 ஞாயிறு 16:08 | பார்வைகள் : 1201
உலகின் மிகப்பெரிய அலுமினிய உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான பஹ்ரைனின் அலுமினிய உற்பத்தி தொழிற்சாலை மீது 28.03.2026 ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் தொழிற்சாலையின் ஊழியர்கள் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து நிறுவனம் தற்போது கணக்கிட்டு வருவதுடன், ஊழியர்களின் பாதுகாப்பே தங்களது முதன்மையான பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்கு மத்தியில், தமது உற்பத்தித் திறனில் சுமார் 19% ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் இதற்கு முன்னர் குறிப்பிட்டிருந்தது.
ஈரானின் இரண்டு எஃகுத் தொழிற்சாலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அலுமினியத் தொழிற்சாலைகளை இலக்கு வைத்ததாக ஈரானிய புரட்சிகர இராணுவம் தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan