ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு ஈரான் கடும் கண்டனம்
29 பங்குனி 2026 ஞாயிறு 14:32 | பார்வைகள் : 1123
லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை, உலக நாடுகளின் மனச்சாட்சியை உலுக்கும் ஒரு எச்சரிக்கை என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி தெரிவித்துள்ளார்.
லெபனானின் 'ஜெஸின்' நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பினால் நடத்தப்படும் 'அல் மனார்' தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் அலி ஷோயப், 'அல் மாயடீன்' ஊடகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள்பாத்திமா மற்றும் முகமது ஃபெடோனி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்
இந்தச் சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள ஈரானிய வெளிவிவகார அமைச்சர், "இது தற்செயலான தாக்குதல் அல்ல, மாறாக உண்மையை உரக்கச் சொல்பவர்களின் குரல்களை ஒடுக்குவதற்காக நடத்தப்பட்ட திட்டமிட்ட படுகொலை எனச் சாடியுள்ளார்.
இதேவேளை, ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள கத்தாரின் 'அல்-அரபி' செய்தி நிறுவனத்தின் அலுவலகம் இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் பலத்த சேதமடைந்துள்ளது.
கட்டிடத்தின் ஜன்னல்கள் மற்றும் தளபாடங்கள் முற்றாகச் சேதமடைந்ததால், அங்கிருந்து முன்னெடுக்கப்பட்டு வந்த நேரலை ஒளிபரப்புகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அலுவலகத்திற்கு வெளியேயிருந்த வாகனங்கள் மற்றும் வீதிகள் பாரிய அளவில் உருக்குலைந்துள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan