விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜயபிரபாகர் போட்டி
29 பங்குனி 2026 ஞாயிறு 07:23 | பார்வைகள் : 849
சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தேமுதிகவில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். விருதுநகரில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
நீண்ட இழுபறிக்கு பின்னர், இந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. அக்கட்சிக்கு 10 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந் நிலையில் இந்த 10 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.
இம்முறை விஜயகாந்த் எம்ஏல்ஏவாக வெற்றி பெற்ற விருத்தாசலத்தில் அவரின் மனைவியும், கட்சியின் பொதுச் செயலாளருமான பிரேமலதா வேட்பாளராக போட்டியிடுகிறார். மகன் விஜய பிரபாகரன், விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
எஞ்சிய தொகுதிகளின் வேட்பாளர்கள் விவரம் வருமாறு;
தருமபுரி - இளங்கோவன்
சேலம் மேற்கு - அழகாபுரம் மோகன்ராஜ்
ஓமலூர் - இளங்கோவன்
மைலம் - வெங்கடேசன்
பல்லாவரம் - அனகை முருகேசன்
திருத்தணி - கிருஷ்ணமூர்த்தி
குடியாத்தம் - பிரதாப்
போளூர் - சரவணன்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan