Paristamil Navigation Paristamil advert login

திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

29 பங்குனி 2026 ஞாயிறு 05:14 | பார்வைகள் : 158


164 தொகுதிகளில் போட்டியிடும்  வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.   அதில் 60க்கும் மேற்பட்ட  புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.  அமைச்சராக இருந்த காந்தி, மனோ தங்கராஜ், கயல்விழி செல்வராஜ் ஆகியோருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

சென்னையில் நிருபர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:

திமுக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது .கூட்டணி கட்சிகள் 11 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், 59 தொகுதிகளில் கூட்டணி கட்சி சின்னங்களிலும் போட்டியிடுகிறோம் என்றார்.

தொடர்ந்து அவர் வெளியிட்ட பட்டியலில் வாய்ப்பு கிடைத்தவர்கள் விவரம்
1. கன்னியாகுமரி - மகேஷ் 2. நாகர்கோயில் - ஆஸ்டின் 3. ராதாபுரம்- அப்பாவு 4.பாளையங்கோட்டை - அப்துல் வஹாப் 5. நெல்லை- சுப்பிரமணியன் 6. ஆலங்குளம்- பால் மனோஜ்பாண்டியன் 7.தென்காசி - கலை கதிரவன் 8.வாசுதேவநல்லூர் - ராஜா  9.கோவில்பட்டி - கருணாநிதி  10.ஓட்டப்பிடாரம்- ராமஜெயம்  11.திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன்  12.தூத்துக்குடி - கீதாஜீவன்  13.விளாத்திகுளம்- மார்கண்டேயன்  14.முதுகுளத்தூர்- ராஜகண்ணப்பன்  15.ராமநாதபுரம்- காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்  16.திருச்சுழி- தங்கம் தென்னரசு  17.அருப்புக்கோட்டை- கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்  18.சாத்தூர் - கடற்கரை ராஜ்  19.கம்பம் - ராமகிருஷ்ணன்  20.போடி- ஓபிஎஸ்  21.ஆண்டிப்பட்டி - மகாராஜன்  22.திருமங்கலம்- சேடபட்டி மணிமாறன்  23.திருப்பரங்குன்றம் - கிருத்திகா  24.மதுரை மேற்கு - ரகுபாலாஜி  25.மதுரை மத்தி- தியாகராஜன்  26.மதுரை வடக்கு- தளபதி  27.சோழவந்தான் வெங்கடேசன்  28.மதுரை கிழக்கு  -மூர்த்தி  29.மானாமதுரை - தமிழரசி   30.திருப்பத்தூர் - பெரிய கருப்பன்  31.ஆலங்குடி - மெய்யநாதன்  32.திருமயம் - ரகுபதி  33.புதுக்கோட்டை - முத்துராஜா  34.விராலிமலை - செல்லபாண்டியன்  35.பேராவூரணி - அசோக்குமார்  36.பட்டுக்கோட்டை - அண்ணாதுரை  37.ஒரத்தநாடு - வைத்தியலிங்கம்  38.தஞ்சாவூர்-  ராமநாதன்  39.திருவையாறு - துரை சந்திரசேகரன்  40.கும்பகோணம் - சாக்கோட்டை க அன்பழகன்  41.திருவிடைமருதூர் - கோவி செழியன்  42.திருவாரூர் - பூண்டி கே கலைவாணன்  43.மன்னார்குடி - டிஆர்பி ராஜா  44.வேதாரண்யம் - புகழேந்தி  45.பூம்புகார் - நிவேதா முருகன்  46.புவனகிரி - துரை கே சரவணன்  47.குறிஞ்சிப்பாடி - எம்ஆர்கே பன்னீர்செல்வம்  48.நெய்வேலி - ராஜேந்திரன்  49.திட்டக்குடி (தனி) - சிவி கணேசன்  50.ஜெயங்கொண்டம் - கண்ணன்  51.அரியலூர் - லதா பாலு  52.குன்னம் - சிவசங்கர்  53.பெரம்பலூர் (தனி) - ஜெயலட்சுமி  54.முசிறி - கருணை ராஜா  55.மண்ணச்சநல்லூர் - கதிரவன்  56.லால்குடி - பாரிவள்ளல்  57.திருவெறும்பூர் - அன்பில் மகேஷ்  58.திருச்சி கிழக்கு - இனிகோ இருதயராஜ்  59.திருச்சி மேற்கு - கேஎன் நேரு  60.ஸ்ரீரங்கம் - துரைராஜ்  61.குளித்தலை - சந்திரன்  62.கிருஷ்ணராயபுரம் (தனி) - ராஜா  63.கரூர் - தியாகராஜன்  64.அரவக்குறிச்சி - இளங்கோ  65.வேடச்சந்தூர் - சாமிநாதன்  66.திண்டுக்கல் - ஐபி செந்தில்குமார்  67.நிலக்கோட்டை (தனி) - நாகஜோதி  68.ஆத்தூர் - ஐ.பெரியசாமி  69.ஒட்டன்சத்திரம் - சக்கரபாணி  70.மடத்துக்குளம் - ஜெயராம கிருஷ்ணன்  71.உடுமலைப்பேட்டை - ஜெயக்குமார்  72.வால்பாறை (தனி) - சுதாகர்  73.கிணத்துக்கடவு - சபரி கார்த்திகேயன்  74.கோவை தெற்கு - செந்தில் பாலாஜி  75.தொண்டமுத்தூர் - கார்த்திகேயன்  76.கோவை வடக்கு - செந்தமிழ்ச் செல்வன்  77.சூலூர் -  முருகேசன்  78.பல்லடம் - செல்வராஜ்  79.திருப்பூர் தெற்கு - தினேஷ்குமார்  80.அவிநாசி (தனி) - கோகிலாமணி  81.மேட்டுப்பாளையம் - கவிதா  82.குன்னூர் - ராஜூ  83.கூடலூர் (தனி) - திராவிட மணி   84.கோபி - நல்லசிவம்  85.அந்தியூர் - சிவபாலன்  86.பவானி - சேகர்  87.பெருந்துறை - தோப்பு வெங்கடாசலம்  88.காங்கேயம் - சாமிநாதன்  89.தாராபுரம் (தனி) - இந்திராணி   90.ஈரோடு மேற்கு - முத்துச்சாமி  91.குமாரபாளையம் - பாலு  92.பரமத்தி வேலூர் - மூர்த்தி  93.நாமக்கல் - ராணி  94.சேந்தமங்கலம் (தனி) - பூமலர்  95.ராசிபுரம் (தனி) - மதிவேந்தன்  96.வீரபாண்டி - தருண்  97.சேலம் தெற்கு - லோகநாதன்  98.சேலம் வடக்கு - ராஜேந்திரன்   99.சங்ககிரி - மணிகண்டன்  100.எடப்பாடி - காசி  101.மேட்டூர் - மிதுன் சக்கரவர்த்தி  102.ஏற்காடு (தனி) - ரேவதி  103.கெங்கவல்லி (தனி) - சின்னதுரை  104.சங்கராபுரம் - உதயசூரியன்  105.ரிஷிவந்தியம் - வசந்தம் கார்த்திகேயன்  106.உளுந்தூர்பேட்டை  - வசந்தவேல்  107.திருக்கோவிலூர் - பொன் கவுதம சிகாமணி  108.விக்கிரவாண்டி - சிவ சண்முகம்  109.விழுப்புரம் - லட்சுமணன்  110.வானூர் (தனி) - கவுதம் திராவிடமணி  111.செஞ்சி - மஸ்தான்  112.வந்தவாசி (தனி) - அம்பேத்குமார்  113.செய்யாறு - ஜோதி  114.ஆரணி - மகாலட்சுமி  115.கலசப்பக்கம் - சரவணன்  116.கீழ்பெண்ணத்தூர் - பிச்சாண்டி  117.திருவண்ணாமலை - எ.வ.வேலு  118.செங்கம் - கிரி  119.அரூர்  - சண்முகம்  120.பாப்பிரெட்டிப்பட்டி - பழனியப்பன்  121. பாலக்கோடு - செந்தில்குமார்  122. ஒசூர் - சத்யா  123.வேப்பனஹள்ளி - சீனிவாசன்  124.பர்கூர் - மதியழகன்  125.திருப்பத்தூர் - நல்லதம்பி   126.ஜோலார்பேட்டை - கவிதா தண்டபானி  127.ஆம்பூர் - வில்வநாதன்  128.கீழ்வைத்தினான்குப்பம்  (தனி)- ராஜேஸ்வரி   129.அணைக்கட்டு - நந்தகுமார்  130.வேலூர் - கார்த்திகேயன்  131.ஆற்காடு - ஈஸ்வரன்  132.ராணிப்பேட்டை - வினோத் காந்தி  133.காட்பாடி - துரைமுருகன்  134.காஞ்சிபுரம் - நித்யா  135.உத்திரமேரூர் - சுந்தர்  136.மதுராந்தகம் (தனி) - அமலு பொன்மலர்  137.செங்கல்பட்டு - கார்த்திக் தண்டபானி  138.தாம்பரம் - கிருத்திகா தேவி  139.ஆலந்தூர் - தா,மோ.அன்பரசன்  140.சோழிங்கநல்லூர் - அரவிந்த் ரமேஷ்  141.மயிலாப்பூர் - வேலு  142.தியாகராய நகர் - ராஜா அன்பழகன்  143.சைதாப்பேட்டை -  மா.சுப்பிரமணியன்  144.விருகம்பாக்கம் -  பிராபகர் ராஜா  145.அண்ணாநகர் -சிற்றரசு  146.ஆயிரம்விளக்கு - எழிலன் நாகநாதன்  147.சேப்பாக்கம்- உதயநிதி  148.துறைமுகம்- சேகர்பாபு  149.ராயபுரம் - சுபையர் கான்  150.எழும்பூர் -தமிழன் பிரசன்னா  151.திருவிக நகர் (தனி) - ரவிச்சந்திரன்   152.வில்லிவாக்கம் - கார்த்திக் மோகன்  153.பெரம்பூர் - ஆர்டி சேகர்  154.ஆர்கே நகர் - எபினேசர்  155.மாதவரம் - சுதர்சனம்  156.அம்பத்தூர்- பூர்ணிமா  157.மதுரவாயல் - கணபதி  158.ஆவடி - நாசர்  159.பூந்தமல்லி - கிருஷ்ணசாமி  160.திருவள்ளூர் - ராஜேந்திரன்  161.கும்மிடிப்பூண்டி - கோவிந்தராஜன்  162.கொளத்தூர் - ஸ்டாலின்  163.ராஜபாளையம் - தங்கப்பாண்டியன்  164.பரமக்குடி- கதிரவன்   தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் கூறுகையில்,    இந்தப் பட்டியலில்  பட்டம் பெற்றவர்கள்  - 125  பெண்கள் - 18 பேர்  முனைவர்கள் - 7 பேர்  டாக்டர்கள் - 15  பிஇ பட்டதாரிகள் -17 பேர்  சட்டம் முடித்தவர்கள்  29 பேர்  புதுமுகங்கள் - 60க்கு மேல் உள்ளனர்.   நாங்கள் லேட்டாக வந்தாலும் ஆனாலும் லேட்டஸ்ட் ஆக வந்துள்ளோம்.   பல கூட்டணி கட்சிகள் உள்ளன. பொறுமையாக பேசி இடையூறுகளை சரி செய்து அனைவரும் திருப்தியடைந்து கையெழுத்து போட்டனர். காலம் தாழ்த்தப்படவில்லை. ஒற்றுமைபடுத்துவதற்காக நேரம் ஆனது எனவும் கூறினார்.  

அமைச்சர்கள் காந்தி, கயல்விழி செல்வராஜ், மனோ தங்கராஜ் ஆகியோருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.  அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்திக்கு ராணிப்பேட்டை தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.