Paristamil Navigation Paristamil advert login

பங்களாதேஷ், பத்மா ஆற்றில் பேருந்து விபத்து - மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

பங்களாதேஷ், பத்மா ஆற்றில் பேருந்து விபத்து - மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

26 பங்குனி 2026 வியாழன் 06:24 | பார்வைகள் : 1187


பங்களாதேஷ் நாட்டின் ராஜ்பாரி பகுதியில் உள்ள பத்மா ஆற்றில் பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்தச் சம்பவம் தௌலத்தியா காட் இலக்கம் 3 பகுதியில் மாலை சுமார் 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

டாக்கா நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து, மிதவைப் பாலத்தில் ஏற முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகாரிகளின் தகவலின்படி, பேருந்து சுமார் 30 அடி ஆழத்திற்கு மூழ்கியுள்ளதுடன், ஒரு சிறிய படகு மோதியதாலும் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தற்போது மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.