2026ஆம் ஆண்டிற்கான Chèque énergie ஏப்ரல் 1 முதல் வழங்கல்!!
25 பங்குனி 2026 புதன் 20:11 | பார்வைகள் : 4157
2026 ஆம் ஆண்டிற்கான எனர்ஜி காசோலைகள் (chèque énergie) புதன்கிழமை, ஏப்ரல் 1 முதல் படிப்படியாக குடும்பங்களின் தபால் பெட்டிகளில் வந்து சேரும். இந்த அரசு உதவி, வீட்டு மின்சாரம் மற்றும் எரிசக்தி கட்டணங்களை செலுத்த உதவுகிறது.
2025 ஆம் ஆண்டில் 48 முதல் 277 யூரோக்கள் வரை மாறுபட்ட இந்த நிதி உதவி, ஆண்டிற்கு ஒருமுறை பயனாளர்களின் வீட்டிற்கு அனுப்பப்படுகிறது. 2026 ஆண்டிற்கான தொகை இன்னும் அறிவிக்கப்படவில்லை. பயனாளர்கள் இதை ஒன்லைன் அல்லது காகித வடிவில் நேரடியாக சேவை வழங்குநர்களிடம் பயன்படுத்தலாம்.
அரசின் அட்டவணைப்படி, ஏப்ரல் மாதம் முழுவதும், பகுதி அடிப்படையில் காசோலைகள் அனுப்பப்படும்.
- ஏப்ரல் 1 முதல் 3 வரை: Réunion, Guadeloupe, Guyane, Mayotte, Martinique, Seine-Saint-Denis உள்ளிட்ட பகுதிகள்
- ஏப்ரல் 7 முதல் 10 வரை: Loire, Yonne, Moselle, Var
- ஏப்ரல் 13 முதல் 20 வரை: Ain, Val-d’Oise, Paris, Alpes-Maritimes
2025 ஆம் ஆண்டிற்கான நிபந்தனைகளின்படி (2026 நிபந்தனைகள் இன்னும் வெளியிடப்படவில்லை), 2023 வருமான வரி அடிப்படையில், ஒவ்வொரு “நுகர்வு அலகு”க்கும் (unité de consommation) வருமானம் 11,000 யூரோவிற்குக் குறைவாக இருக்க வேண்டும்.
- ஒரு தனி நபர் = 1 அலகு
- இரண்டாவது நபர் = 0.5 அலகு
- அதற்கு பின் ஒவ்வொரு நபரும் = 0.3 அலகு
ஏப்ரல் 1 முதல் அரசு இணையதளத்தில் தகுதி பரிசோதனை செய்யலாம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan