Paristamil Navigation Paristamil advert login

ஈரானுடன் அமெரிக்கா நடத்தும் அமைதி பேச்சு வார்த்தையில் தொடர்பில்லை - இஸ்ரேல் அறிவிப்பு

ஈரானுடன் அமெரிக்கா நடத்தும் அமைதி பேச்சு வார்த்தையில்  தொடர்பில்லை -  இஸ்ரேல் அறிவிப்பு

25 பங்குனி 2026 புதன் 14:03 | பார்வைகள் : 340


ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கிய போர் 25 நாட்களுக்கும் மேல் நடந்து வருகிறது.

ஈரானுடன் அமெரிக்கா நடத்தும் அமைதி பேச்சு வார்த்தைக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஒருபக்கம் அமெரிக்காவின் ராணுவ தளம் அமைந்திருக்கும் வளைகுடா நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குதலை நடத்தி வருகிறது. இதன் காரணமாக உலகெங்கும் கச்சா எண்ணெய் செல்வது தடைபட்டிருக்கிறது.

கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் கப்பல்களின் வழித்தடமான ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் அரசை மூடியிருக்கிறது. இதன் காரணமாக பல நாடுகளிலும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது கப்பல் போக்குவரத்து தடைப்பட்டதால் கேஸ் சிலிண்டர் கிடைக்காமல் பல நாடுகளில் உணவகங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

போர் முடிவுக்கு வரவேண்டும் என்பது உலகம் முழுவதும் உள்ள மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் அரசுடன் உயர் மட்ட அளவிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறியிருக்கிறார்.

மத்திய கிழக்கில் நிலவும் இந்த மோதலை முற்றிலுமாக முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க தீவிரமாக முயற்சி செய்து வருவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். இந்நிலையில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இல்லை என இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.

ஈரானுடன் அமெரிக்கா நடத்தும் அமைதி பேச்சு வார்த்தைக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என இஸ்ரேல் அரசு அறிவித்திருக்கிறது.

மேலும் ஈரானிய அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்களை முழுமையாக ஒழிக்கும் வரை ஏற்கனவே திட்டமிட்டபடி ஈரான் மீது தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்துள்ளமை ஏற்கவே ரிவயு, எரிபொருளுக்கு திண்டாடும் உலக நாடுகளுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.