இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நடவடிக்கைகளுக்கு துருக்கி ஜனாதிபதி கண்டனம்
25 பங்குனி 2026 புதன் 13:14 | பார்வைகள் : 1429
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நடவடிக்கைகளுக்கு துருக்கி ஜனாதிபதி எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாலஸ்தீனம், லெபனானை தொடர்ந்து இஸ்ரேலிய படைகள் ஈரான் மீது இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் படுகொலை வலையமைப்பை உடனடியாக நிறுத்திட சர்வதேச சமூகங்கள் விரைந்து முன்வர வேண்டும் என்று துருக்கி ஜனாதிபதி ரசெப் தையிப் எர்டோகன் செவ்வாய்க்கிழமை அறைகூவல் விடுத்துள்ளார்.
Anadolu செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், தற்போது மோற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவது என்பது மனித குலத்திற்கும், பிராந்திய அமைதிக்கும் எடுக்கப்படும் முக்கியமான நடவடிக்கையாக அமையும் என்று எர்டோகன் குறிப்பிட்டுள்ளார்.
உலக நாடுகள் பேச்சு உடன் நின்றுவிடாமல் துணிச்சலோடும், செயல்படுத்தும் நோக்கத்துடன் பேரழிவை தடுத்திட முன்வர வேண்டும் என்று எர்டோகன் வலியுறுத்தியுள்ளார்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் தங்களது இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி வரும் நிலையில் ஏர்டோகன் தன்னுடைய இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
பெஞ்சமின் நெதன்யாகு தன்னுடைய பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக இந்த போரை நடத்தி வருவதாக ஏர்டோகன் விமர்சித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் போராக இது இருக்கலாம், ஆனால் இது உலகில் உள்ள 800 கோடி மக்களையும் பாதிக்கிறது.
ஒட்டுமொத்த உலகமும் அதற்கான விலையை கொடுத்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan