பிலிப்பைன்ஸில் ‘தேசிய எரிசக்தி அவசர நிலை’ பிரகடனம் - எரிபொருள் விநியோக தடையால் கடும் பாதிப்பு
25 பங்குனி 2026 புதன் 07:20 | பார்வைகள் : 1149
மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் மோதல்களின் தாக்கத்தால், உலகிலேயே முதன்முறையாக பிலிப்பைன்ஸ் அரசு ‘தேசிய எரிசக்தி அவசர நிலை’ ஒன்றை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக கடுமையாக பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் பிலிப்பைன்ஸும் ஒன்றாகக் கருதப்படுகிறது.
நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பில் உருவாகியுள்ள அச்சுறுத்தலை முன்னிட்டு இந்த அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் தனது மசகு எண்ணெய் தேவையின் சுமார் 98 சதவீதத்தை வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது. இதனால், மத்திய கிழக்கு மோதல்களின் நேரடி விளைவுகளை அந்த நாடு சந்தித்து வருகிறது.
போர் சூழ்நிலை தொடங்கிய கடந்த மூன்று வாரங்களுக்குள், டீசல் மற்றும் பெற்றோல் விலைகள் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் தொழில்துறை துறைகள் கடும் பொருளாதார அழுத்தத்துக்குள்ளாகியுள்ளன.
நாட்டின் எரிசக்தி விநியோகத்திற்கு “உடனடி ஆபத்து” இருப்பதாக சுட்டிக்காட்டி, ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் அவசர நிலை உத்தரவை வெளியிட்டுள்ளார்.
இந்த அவசர நிலை அறிவிப்பின் கீழ், அரசாங்கத்திற்கு கூடுதல் சட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எரிசக்தி நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், எரிபொருள், உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை கண்காணிக்க விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், எரிபொருள் கையிருப்பை உறுதி செய்ய அரசாங்கமே நேரடியாக எரிபொருளைக் கொள்முதல் செய்யும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போதைய பயன்பாட்டு அளவுகளின்படி பிலிப்பைன்ஸில் சுமார் 45 நாட்களுக்கு மட்டுமே போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அந்த நாட்டின் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலை தொடர்ந்தால், எரிசக்தி துறையில் மேலும் கடுமையான சவால்கள் உருவாகக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan