ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு தொடர்பில் பஹ்ரைன் அதிரடித் தீர்மானம்!
24 பங்குனி 2026 செவ்வாய் 16:34 | பார்வைகள் : 1464
ஹோர்முஸ் நீரிணையில் சர்வதேச வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, தேவைப்படும் பட்சத்தில் இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதற்கு நாடுகளுக்கு அனுமதி வழங்கும் வகையிலான வரைவுத் தீர்மானம் ஒன்றை பஹ்ரைன் ஐ.நா பாதுகாப்புச் சபையில் சமர்ப்பித்துள்ளது.
பஹ்ரைனால் முன்மொழியப்பட்டுள்ள இந்தத் தீர்மானம், ஹோர்முஸ் நீரிணையில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தைத் தடுக்கும் அல்லது இடையூறு விளைவிக்கும் நடவடிக்கைகளை முறியடிக்க "அனைத்து அவசியமான வழிமுறைகளையும்" பயன்படுத்துவதற்கு உலக நாடுகளுக்கு அல்லது சர்வதேச கடற்படைக் கூட்டணிகளுக்கு அதிகாரம் வழங்குமாறு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என இந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது.
கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நபர்கள் அல்லது அமைப்புகளுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட தடைகளை விதிக்கவும் இந்தத் தீர்மானம் பரிந்துரைக்கிறது.
அண்டை நாடுகளின் கடல் எல்லைகளுக்குள்ளும் சென்று பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதிகாரம் இதில் கோரப்பட்டுள்ளது.
பஹ்ரைனின் இந்தத் தீர்மானம் அமெரிக்கா மற்றும் ஏனைய வளைகுடா நாடுகளின் ஆதரவைப் பெற்றுள்ள போதிலும், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தமது 'வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி இதனைத் தடுக்க வாய்ப்புள்ளதாக இராஜதந்திரிகள் கருதுகின்றனர். இந்நிலையில், பிரான்ஸ் நாடு மிகவும் நிதானமான ஒரு மாற்றுத் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan