அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் விவேகமாக சிந்திக்க வேண்டும் ஈரானின் முக்கிய உறுப்பினர்
24 பங்குனி 2026 செவ்வாய் 16:26 | பார்வைகள் : 336
ஈரான் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய அதிகாரிகள் "விவேகமாக சிந்திக்க வேண்டும்" என்று ஈரான் நாடாளுமன்றத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி (Esmaeil Kowsari) இவ்வாறு எச்சரிக்கை விடுத்ததாக பார்ஸ் செய்தி நிறுவனத்தை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியிலேயே தெஹ்ரான் மீது வொஷிங்டன் தாக்குதல்களை நடத்திய வரலாற்றை அவர் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு போன்றவர்கள் இயல்பாகவே பொய்யர்கள் என்றும், மக்களிடையே பிளவுகளை விதைப்பதே அவர்களின் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈரான் இராணுவத்தில் மேஜர் ஜெனரலாகவும் பதவி வகிக்கும் அவர், "அதிகாரிகள் மீது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவும், உண்மையில் எந்த முன்னேற்றமும் இல்லாத போது ஏதோ சாதிக்கப்பட்டது போன்ற பிம்பத்தை உருவாக்கவும் அவர்கள் முயல்கிறார்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan