கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினி சம்பளம் எவ்வளவு?
24 பங்குனி 2026 செவ்வாய் 16:16 | பார்வைகள் : 307
கமல் தயாரிக்க, ரஜினி நடிக்கும் படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அந்த படத்தில் ரஜினிக்கு எவ்வளவு சம்பளம் என்பது பலரின் கேள்வியாக உள்ளது. நண்பர் என்பதால் ரஜினிக்கு குறைவாக சம்பளம் கொடுக்கிறாரா கமல் என்பதும் பலருக்கு டவுட். ஆனால், இது குறித்து விசாரித்தால், அந்த படத்தில் ரஜினிக்கு சம்பளம் இல்லை. ஆனால், அதற்கு பதிலாக வியாபாரத்தில் இவ்வளவு தொகை என்ற ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் பெறுகிறார். அதுவே பெருந்தொகை.
அதேசமயம், நெல்சன் இயக்க, கமலுடன் இணைந்து நடிக்கும் படத்தில் இதுமாதிரியான ஒப்பந்தத்தில் ரஜினி கமிட்டாகவில்லை. அந்த படத்தை தயாரிக்கும் ரெட் ஜெயன்ட் நிறுவனம், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு சம்பளத்தை ரஜினிக்கு கொடுக்கிறது என்றும் கோலிவுட்டில் பேசப்படுகிறது. வரும் காலத்தில் ரஜினி பாலிசியை மற்ற ஹீரோக்களும் பின்பற்றலாம். அவர்களுக்கும் வியாபார அடிப்படையில் சம்பளம் வழங்கலாம் என்று கூறப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan