Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் தங்கத்தின் விலையில் பாரிய சரிவு!

இலங்கையில் தங்கத்தின் விலையில் பாரிய சரிவு!

24 பங்குனி 2026 செவ்வாய் 12:21 | பார்வைகள் : 1882


மத்திய கிழக்கு யுத்த சூழ்நிலை காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் பாரிய சரிவைக் கண்டுள்ள நிலையில் நேற்று உள்நாட்டிலும் அந்த விலைச் சரிவு காணப்பட்டதாக தங்கநகை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றையதினம் வெகுவாகக் குறைந்துள்ள நிலையில் கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் 8,000 ரூபாவால் குறைந்துள்ளதாக அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,371 டொலராக விற்பனை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வெள்ளி ஒரு அவுன்ஸ் நேற்றைய தினம் 65.62 டொலராக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 370,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதுடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 42,550 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்