'கருப்பு' படத்தில் சாய் அபயங்கரை இசை அமைப்பாளராக்கியது ஏன்?
24 பங்குனி 2026 செவ்வாய் 11:49 | பார்வைகள் : 135
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' படம் அடுத்து வெளிவருகிறது. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களிலிருந்து 'காட் மோட்' பாடல் முதல் சிங்கிளாக சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்கள். தற்போது இரண்டாவது சிங்கிள் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்திற்கு முதலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பதாக இருந்தது. அவர் விலகிக்கொள்ளவே தற்போது சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார். இதுகுறித்து ஆர்.ஜே.பாலாஜி கூறியிருப்பதாவது: ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற பெரிய இசை அமைப்பாளர் படத்திலிருந்து விலகிய உடன் அவர் போன்றே அடுத்து வரும் இசையமைப்பாளரும் அதே லெவலில் இருக்க வேண்டும்' என நினைத்திருப்பார்கள்.
ஆனால் நான் அப்படி பார்க்கவில்லை. இந்தப் படத்திற்கு முன்பு நான் சாய் அபயங்கரைச் சந்தித்ததே இல்லை. அவரிடம் நான் அபரிமிதமான எனர்ஜியைப் பார்த்தேன். அந்த எர்ஜியை முழுமையாகப் பயன்படுத்த விரும்பினேன். அதை தயாரிப்பு குழுவிடமும் சூர்யாவிடமும் சொன்னேன். ரஹ்மானை விட்டு விட்டு ஒரு புதியவரைக் கொண்டு வருவது பெரிய மாற்றம். ஆனால் நான் என்னை நம்புங்கள் என்றேன். அதை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.
இது சாய் அபயங்கரின் முதல் பெரிய படம் இதுதான். ஆனால் இப்போது அவர் இதுபோன்ற பல புராஜெக்ட்களில் கமிட்டாகி இருக்கிறார். இன்று எல்லாரும் இது சரியான முடிவு என்று உணர்கிறார்கள். அடுத்த ஜெனரேஷன் அவருடைய பாடல்களை அதிகம் கேட்கப் போகிறது. என்கிறார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan