கொலம்பியாவில் இராணுவ விமானம் விபத்தில் 34 பேர் பலி - 77 பேர் மீட்பு!
24 பங்குனி 2026 செவ்வாய் 06:00 | பார்வைகள் : 985
கொலம்பியாவின் தெற்கு அமேசான் பிராந்தியத்தில் 125 பேருடன் பயணித்த இராணுவப் போக்குவரத்து விமானம் ஒன்று விழுந்து நொருங்கியதில் குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து பெரு எல்லையிலுள்ள புடுமாயோ மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.
கொலம்பிய விமானப்படைக்குச் சொந்தமான 'லொக்ஹீட் மார்ட்டின் ஹெர்குலஸ் சி-130' ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விமானத்தில் 114 பயணிகள் மற்றும் 11 பணியாளர்கள் உட்பட மொத்தம் 125 பேர் இருந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இராணுவ வீரர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து நடந்த இடத்திலிருந்து இதுவரை 77 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய 40 பேரின் நிலை குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
விமானம் அடர்ந்த மழைக்காடுகளுக்கு மேல் பறந்து கொண்டிருந்தபோது, மெதுவாகத் தரைநோக்கி இறங்கி விழுந்து நொருங்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த பொதுமக்கள், காயமடைந்த இராணுவ வீரர்களைத் தமது மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் சென்று காப்பாற்றும் காட்சிகள் பலரது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த விபத்தைத் தொடர்ந்து கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோ கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
கொலம்பியா 1960-களிலிருந்து இந்த சி-130 ரக விமானங்களைப் பயன்படுத்தி வருகின்றது. இராணுவத்தை நவீனமயப்படுத்தும் தனது திட்டத்தைத் தடுத்து நிறுத்துவோரை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் பெட்ரோ அனுல்போ சான்செஸ் விபத்து குறித்து ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ளதுடன், விபத்துக்கான காரணம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan