IPL-லில் இந்த விதிகள் எனக்கு பிடிக்கவில்லை - டெல்லி கேப்டன் அக்சர் படேல் கருத்து
24 பங்குனி 2026 செவ்வாய் 05:48 | பார்வைகள் : 838
ஐபிஎல்-லில் இந்த ஒரு விதி எனக்கு பிடிக்கவில்லை என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் கருத்து தெரிவித்துள்ளார்.
2026 ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் இந்த மாதம் 28ம் திகதி தொடங்கவுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.
இந்த ஐபிஎல் தொடரில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த ஆண்டு கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முடிவில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல், ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் சப்(Impact sub) விதி எனக்கு பிடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விதியின் மூலம் சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் சிறந்த பந்துவீச்சாளர்களை அணிகள் களமிறக்குகின்றனர்.
அதே சமயம் இந்த விதியால் ஆல் ரவுண்டர்களின் நிலைமை மோசமடைந்து வருவதுடன் அவர்களுக்கான இடம் பாதிப்படைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
என்ன இருந்தாலும் விதிகள் விதிகள் தான், அதற்கு ஏற்ற மாதிரி விளையாட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்துள்ள அக்சர் படேல், டி20 உலக கோப்பைக்கு பிறகு சிறிது நேரம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவழிக்க விரும்பியதாக தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan