திமுக- காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் விரக்தி; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
23 பங்குனி 2026 திங்கள் 13:54 | பார்வைகள் : 261
திமுக - காங்., கூட்டணி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். கூட்டணி கட்சியினர் திருப்தி அடையும் வகையில் தொகுதி பங்கீடு அமையும் என தமிழக பாஜ மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் தெரிவித்தார்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாஜ உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு இன்று (மார்ச் 23) இறுதி செய்யப்பட உள்ளது. இதற்காக, இன்று சென்னை வந்த தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றனர். பிறகு நிருபர்கள் சந்திப்பில் பியூஷ் கோயல் கூறியதாவது:
திமுக- காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் விரக்தி மற்றும் அதிருப்தியில் உள்ளனர். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் தோல்வியை சந்திக்கின்றன. தமிழகம் மாற்றத்திற்கு தயாராக உள்ளது. தமிழக அரசியலில் புதிய தொடக்கம்; மாற்றத்தை மக்கள் வரவேற்கிறார்கள். அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முதல்வராக வர வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகின்றனர்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். வளர்ந்த தேசத்திற்கு வளர்ந்த தமிழகம் வழிவகுக்கும். தேஜ கூட்டணி ஒரு குடும்பம் போல் செயல்பட்டு வருகிறது. ஊழல் கறை படிந்த திமுக கூட்டணியை வீழ்த்த அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்துள்ளது. இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதி பங்கீடு நடைபெறும்.
தொகுதி பங்கீடு
கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் அமர்ந்து பேசி தொகுதி பங்கிட்டு விவரங்களை அறிவிப்போம். அனைவரும் மகிழ்ச்சி மற்றும் திருப்தி அடையும் வகையில் தொகுதி பங்கீடு அமையும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் வளர்ச்சிக்கான அரசு அமைய வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan