ரெய்னா, ஹெய்டனுக்கு “ஹால் ஆஃப் ஃபேம் விருந்து” - சென்னையில் ஒன்று கூடிய CSK சிங்கங்கள்
23 பங்குனி 2026 திங்கள் 06:13 | பார்வைகள் : 802
சுரேஷ் ரெய்னா, ஹெய்டன், சஞ்சு சாம்சன் மற்றும் சிவம் துபே ஆகியோருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 28ம் திகதி தொடங்குகிறது.
இதற்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக Roar at Cheapuk என்ற பெயரில் கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து ரசிகர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்.
மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய கடந்த கால வீரர்கள் மற்றும் தொடர் சாதனைகள் குறித்து விவரித்துள்ளார்.
சென்னை அணி ஐபிஎல் தொடரில் இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது,
விழாவில் இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்த சஞ்சு சாம்சன் மற்றும் ஷிவம் துபே ஆகியோருக்கு விசில் சின்னம் பொறிக்கப்பட்ட விருது வழங்கப்பட்டது.
அதைபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான்களான சுரேஷ் ரெய்னா, ஹெய்டன் ஆகியோருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி "ஹால் ஆஃப் பேம்" என்ற உயரிய விருது வழங்கி சிறப்பித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan