Paristamil Navigation Paristamil advert login

ஈரானுக்கு எதிராக 20 நாடுகள் கூட்டு கண்டன அறிக்கை

ஈரானுக்கு எதிராக 20 நாடுகள் கூட்டு கண்டன அறிக்கை

22 பங்குனி 2026 ஞாயிறு 12:49 | பார்வைகள் : 182


மத்திய கிழக்கு பகுதியில் முக்கியமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதற்கு எதிராக கண்டனம் தெரிவித்து 20-க்கும் மேற்பட்ட நாடுகள் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், கனடா, ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, நியூசிலாந்து, டென்மார்க், நெதர்லாந்து, லாட்வியா, ஸ்லோவேனியா, எஸ்டோனியா, நோர்வே, ஸ்வீடன், பின்லாந்து, செக்கியா, ருமேனியா, பஹ்ரைன், லிதுவேனியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த அறிக்கையில், ஈரான் வணிக கப்பல்களுக்கு எதிராக நடத்திய தாக்குதல்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்கள், ஹார்முஸ் நீரிணையை மூடிய நடவடிக்கை ஆகியவை சர்வதேச சட்டத்திற்கு எதிரானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணை வழியாக உலகின் 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு கடத்தப்படுகிறது. ஈரானின் நடவடிக்கையால் உலகளாவிய எரிசக்தி விலை அதிகரித்துள்ளது.

மார்ச் 1 முதல் 19 வரை வழக்கமான காலத்தில் 2,000-க்கும் மேற்பட்ட கப்பல்கள் கடந்து செல்லும் நிலையில், வெறும் 116 கப்பல்கள் மட்டுமே கடந்து சென்றுள்ளன. இது 95 சதவீதம் குறைவாகும்.

மேலும் இந்த அறிக்கையில், சர்வதேச கடல்சார் பாதுகாப்பு, எரிசக்தி விநியோகம், உலக அமைதி ஆகியவை ஆபத்தில் உள்ளன என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஐ.நா. மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள் மூலம் உதவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமை உலகலாவிய எரிசக்தி சந்தையை பாதிக்கக்கூடும் என்பதால், சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அறிக்கை வலியுறுத்துகிறது.