Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் எரிபொருள் விநியோக அளவு அதிகரிப்பு! கியூ. ஆர். முறையில் புதிய அளவுகள் அறிவிப்பு

இலங்கையில் எரிபொருள் விநியோக அளவு அதிகரிப்பு! கியூ. ஆர். முறையில் புதிய அளவுகள் அறிவிப்பு

21 பங்குனி 2026 சனி 17:15 | பார்வைகள் : 975


QR குறியீட்டு முறையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை (Quota) இன்று (21) நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, வாகனங்களுக்கான புதிய எரிபொருள் ஒதுக்கீட்டு விபரங்கள் பின்வருமாறு:

கார்கள்: 15 லீற்றரிலிருந்து 25 லீற்றர் வரை அதிகரிப்பு.

முச்சக்கரவண்டிகள்: எரிபொருள் ஒதுக்கீடு 20 லீற்றர் வரை அதிகரிப்பு.

வேன்கள்: 50 லீற்றர் வரை அதிகரிப்பு.

மோட்டார் சைக்கிள்கள்: 8 லீற்றர் வரை அதிகரிப்பு.

பேருந்துகள் : 100 லீற்றர் வரை அதிகரிப்பு.

எரிபொருள் விநியோகத்தை சீர்செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.