யாழில். உறவினர் வீட்டுக்கு சென்று தாலிக்கொடியை திருடிய பெண்

6 புரட்டாசி 2023 புதன் 05:49 | பார்வைகள் : 8870
யாழ்ப்பாணத்தில் உறவினரின் வீடொன்றுக்கு சென்ற சமயம் வீட்டில் இருந்த தாலிக்கொடியை திருடிய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சித்தன்கேணி பகுதியில் உள்ள வீடொன்றில் மேசை மீது வைக்கப்பட்டு இருந்த தாலி கொடியை காணவில்லை என வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , தாலிக் கொடி காணாமல் போன அன்றைய தினம் அவர்களின் வீட்டுக்கு வந்து சென்ற உறவினரான பெண்ணின் மீது சந்தேகம் கொண்டு அவரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , தாலி கொடியை திருடியதை ஒப்புக்கொண்ட பெண் , அதனை அடகு நிறுவனம் ஒன்றில் 2 இலட்ச ரூபாய்க்கு அடகு வைத்துள்ளதாக தெரிவித்தார்.
அதனை அடுத்து , அடகு வைக்கப்பட்ட நகையை மீட்ட பொலிஸார் , நகையுடன் பெண்ணை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் முற்படுத்தினர்.
வழக்கினை விசாரித்த நீதவான் , பெண்ணை கடுமையாக எச்சரித்து பிணையில் செல்ல அனுமதித்தார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1