சீலா மீன் பொடிமாஸ்.
21 பங்குனி 2026 சனி 15:30 | பார்வைகள் : 255
சீலா மீன் சுவைக்கு ஈடான எந்தவொரு மீனையும் சொல்ல முடியாது. குழம்பு, வறுவல் செஞ்சு சாப்பிட்டு பழகிருச்சுன்னா கொஞ்சம் மாறுதலா முட்டை கூட சேர்த்து சீலா மீன் பொடிமாஸ் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. சீக்கரமாவும் சமைச்சுரலாம் டேஸ்ட்டும் சூப்பரா இருக்கும்.
தேவையான பொருட்கள் : சீலா மீன், முட்டை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மிளகு தூள், உப்பு, தேங்காய் எண்ணெய், கடுகு, சோம்பு, வெள்ளை பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கருவேப்பிலை.
செய்முறை : சீலா மீன் சுத்தம் செய்து துண்டு துண்டாக வெட்டி வைத்து, அதில் மஞ்சள் மற்றும் கொஞ்சம் உப்பு சேர்த்து விட்டு இட்லி அவிக்கும் பாத்திரத்தில் வைத்து அவித்து எடுக்கவும். அவித்த பின் மீனின் முள் தனியாகவும் சதை தனியாகவும் பிரித்து எடுத்து சதையை உதிரி உதிரியாக எடுத்து வைக்கவும் பெரும்பாலும் முள் குறைவாக உள்ள மீனை எடுத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து கடாயை தேங்காய் எண்ணெய் ஊற்றி கொண்டு எண்ணெய் சூடாக வேண்டும். சமையல் எண்ணையை விட தேங்காய் எண்ணெய் சுவை கூடுதலாக இருக்கும். சூடான எண்ணெயில் கடுகு, சோம்பு, தட்டிய வெள்ளைப்பூண்டு சேர்த்து வதக்கவும், இதில் சின்ன வெங்காயத்தை பொடியதாக நறுக்கி சேர்த்து அத்துடன் கார சுவைக்காக இரண்டு பச்சை மிளகாய் எடுத்து சேர்த்துக்கொண்டு வதக்கி கொள்ளவும்.
பின் தக்காளி சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து அத்துடன் கருவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு முட்டையை உடைத்து ஊற்றி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக ஐந்து நிமிடம் வரை மிக்ஸ் செய்து கொண்டு உதிரி உதிரியாக எடுத்து வைத்த மீனை சேர்த்துக்கொண்டு வதக்கி எடுத்து 5 நிமிடம் வரை மிக்ஸி செய்து மிளகு பொடி சேர்த்து எடுத்தால் சீலா முட்டை பொடிமாஸ் அட்டகாசமான டேஸ்ட்ல ரெடியா இருக்கும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan