தென் கொரிய கார் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து - 10 பேர் பலி
21 பங்குனி 2026 சனி 10:31 | பார்வைகள் : 1014
தென் கொரிய கார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் மாயமாகியுள்ளதாக தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவின் டேஜியோன் நகரில் உள்ள கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ பற்றியுள்ளது. குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்தனர்.
தீ பற்றியபோது, தொழிற்சாலையில் பணியில் தொழிலாளர்கள் 170 பேர் இருந்தனர் என தென் கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் தொழிலாளர்கள் 59 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 25 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தீ பற்றியதற்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் இதுவரை தெரிவிக்கவில்லை.
கட்டடம் இடிந்து விழும் அபாயம் இருந்ததால், தீயணைப்பு வீரர்களால் உடனடியாகத் தொழிற்சாலைக்குள் நுழைய முடியவில்லை.
இதுவே உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan