சூடுபிடிக்கும் புதுச்சேரி சட்டசபை தேர்தல்; இரு தொகுதிகளில் முதல்வர் வேட்புமனு தாக்கல்
21 பங்குனி 2026 சனி 01:30 | பார்வைகள் : 1091
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிட இரு தொகுதிகளில் முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக வரும் 23ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. திமுக, காங்கிரஸ் தனித்தனியே போட்டியிடுகின்றன. ஆளும் என்ஆர் காங்கிரஸ் - பாஜ கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது. தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பாஜவினர் தயாராக இருக்கும் சூழலில், அவர்களை சந்திப்பதை முதல்வர் ரங்கசாமி தவிர்த்து வந்தார்.இன்று நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தேஜ கூட்டணியில் தொடர்வதை ரங்கசாமி உறுதி செய்துள்ளார்.
இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் தொகுதிகளில் அவர் போட்டியிடுகிறார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan