ரஷ்ய எண்ணெய் கப்பலை தடுத்து நிறுத்திய பிரஞ்சு கடற்படை!!
20 பங்குனி 2026 வெள்ளி 16:34 | பார்வைகள் : 576
பிரஞ்சு கடற்படை, ரஷ்யாவில் இருந்து வந்த “டெய்னா” (le Deyna) என்ற எண்ணெய் கப்பலை மேற்கு மத்திய தரைக்கடலில் தடுத்து நிறுத்தியது. மொசாம்பிக் கொடியை ஏந்தியிருந்தாலும், அது “பொய்யான கொடி”யுடன் பயணம் செய்தது என ஆய்வில் உறுதிசெய்யப்பட்டது. கப்பல் தற்போது அதிகாரிகளின் கண்காணிப்பில் மேலதிக விசாரணைக்காக கொண்டு செல்லப்படுகிறது.
இந்த கப்பல் ரஷ்யாவின் “மாயமாக மறைந்து போகும் கப்பல் படையின் (flotte fantôme) ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. இத்தகைய கப்பல்கள் சர்வதேச தடைகளை தவிர்த்து எண்ணெய் வர்த்தகம் செய்து, ரஷ்யாவின் போராட்டத்திற்கு நிதி வழங்குகின்றன என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகளை பிரான்ஸ் அனுமதிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது ரஷ்யாவுடன் தொடர்புடைய சந்தேகிக்கப்படும் கப்பலை பிரான்ஸ் தடுத்த மூன்றாவது சம்பவமாகும். முன்பும் இதுபோன்ற கப்பல்கள் தடுக்கப்பட்டுள்ளன, மேலும் இவ்வகை “மறைவுக் கப்பல் படையில்" சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் நூற்றுக்கணக்கான கப்பல்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடைகளை விதித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan