மெக்சிக்கோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 11 பேர் சுட்டுக்கொலை !
20 பங்குனி 2026 வெள்ளி 13:53 | பார்வைகள் : 1190
மெக்சிக்கோவில் சினலோவா கார்ட்டல் என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக மெக்சிக்கன் இராணுவம் தெரிவித்துள்ளது.
மெக்சிகன் இராணுவ அதிகாரிகளின் அறிவித்ததன்படி சினலோவா கார்ட்டல் என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் பலியானதுடன் குறித்த கும்பலின் தலைவரான ஓமர் ஓஸ்வால்டோ டோரஸ் கைதுசெய்யப்பட்டுள்ளததாக தெரிவித்தனர்.
இந்த சுற்றிவளைப்பு வடக்கு மெக்சிக்கோவில் உள்ள சினலோவா மாநிலத்தில் இடம்பெற்றதாகவும் குறித்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியானதுடன் அவர்கள் தொடர்பான அடையாளங்கள் இதுவரை பொதுமக்களுக்கு வெளியிடப்ப்படவில்லை என இராணுவ அதிகாரிகளின் தெரிவித்துள்ளனர் .
இந்த சுற்றிவளைப்பின் போது சம்பவ இடத்தில் இருந்து சக்திவாய்ந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நாட்டைக்கட்டியெழுப்பும் நோக்கத்தின் கீழ் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக மெக்சிக்கன் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan