BE 6 Batman Edition காருக்கு Buyback அறிவித்த மஹிந்திரா
20 பங்குனி 2026 வெள்ளி 13:21 | பார்வைகள் : 1287
மஹிந்திரா நிறுவனம் தனது BE 6 Batman Edition மின்சார SUV-க்கு சிறப்பு Buyback திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த கார், Warner Bros உடன் இணைந்து உருவாக்கப்பட்ட தனிப்பட்ட பதிப்பு. ஆரம்பத்தில் 999 யூனிட்கள் மட்டுமே வெளியிடப்பட்டு, 135 விநாடிகளில் முழுமையாக விற்றுவிட்டது.
பின்னர், நிறுவனம் மேலும் 999 யூனிட்களை வெளியிட்டது. அவையும் 7 நிமிடங்களில் விற்றுவிட்டன.
ஆனால், முதல் 999 வாங்கியவர்கள், “எங்களின் கார் இனி தனித்துவம் இல்லாமல் போய்விட்டது” என்று சமூக ஊடகங்களில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், மஹிந்திரா நிறுவனம் முதல் 999 வாங்கியவர்களுக்கு முழுமையான Buyback திட்டத்தை அறிவித்துள்ளது.
விருப்பமுள்ளவர்கள் தங்களது அருகிலுள்ள டீலர்ஷிப்பை தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்துகொள்ளலாம். இந்த சலுகை, அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 29 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும்.
Mahindra BE 6 Batman Edition விலை ரூ.18.90 லட்சம் (ex-showroom) முதல் தொடங்குகிறது. தற்போது, பல நகரங்களில் அதன் on-road விலை சுமார் ரூ.20 லட்சம் வரை உள்ளது.
இந்த Buyback திட்டம், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறும் முயற்சியாகக் கருதப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan